
பட்டாசு தொழிலாளர்கள் நலனின் திமுக அரசு அக்கறை காட்டவில்லை. நெசவாளர்கள் தொழிலிலும் அமைச்சர்கள் நேரடியாக தலையிடாமல் நெசவாளர்கள் வாழ்வாதாரர்கள் இழந்துள்ளனர். தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் பேட்டி,

டாஸ்மாக் முறைகேடு குறித்து தமிழக காவல்துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையிலேயே அமலாக்கத்துறை விசாரணை செய்ததாக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார் நீதிமன்ற தீர்ப்பில் நாம் கருத்து சொல்ல இயலாது
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தொகுதி முன்னாள் எம்எல்ஏவும், பாஜக பிற்படுத்தப்பட்டோர் பிரிவு மாநில துணைத்தலைவருமான கோபால்சாமி இல்லத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பாஜக நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி,
தமிழக காவல் துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையிலேயே டாஸ்மாக் முறைகேடு குறித்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது இது குறித்து கருத்து தெரிவிக்க இயலாது.
சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் என்னிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அந்த கோரிக்கையின் அடிப்படையில் பட்டாசு தொழில் வலுவடைய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் அதை தெரிவித்தார். அதைத் தொடர்ந்து தமிழகத்தில் விசைத்தறி தொழிலாளர்களின் பிரச்சனையை தீர்க்க விசைத்தறி தொழிலாளர்கள் துறை அமைச்சர் தொழிலாளர்கள் மற்றும் விசைத்தறி உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்த முதல்வரும், கைத்தறித்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் சரவணதுரை ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ கோபால்சாமி. மற்றும் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
