• Fri. Apr 19th, 2024

மக்களை ஏமாற்றும் திமுக அரசு.. கே.டி.ராஜேந்திரபாலாஜி விலாசல்..

Byகாயத்ரி

Apr 5, 2022

ஓட்டு போட்ட மக்களை திமுக அரசு ஏமாற்றி கோமாளியாக்கி விட்டது என்று சிவகாசியில் நடைபெற்ற சொத்து வரி உயர்வு கண்டன கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.

சொத்து வரியை 150 சதவிகிதமாக உயர்த்திய திமுக அரசை கண்டித்தும் , சொத்து வரி உயர்வை திமுக அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும், அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை நிறுத்திய திமுக அரசை கண்டித்தும் விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பாக சிவகாசியில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது,
தமிழக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, கழக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இட்ட கட்டளையை ஏற்று இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. சொத்து வரி உயர்வா அல்லது சொத்து பறிப்பா என்ற நிலையில் வாக்களித்த மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். சொத்து வரி உயர்வை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தியும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தையும் திருமண உதவித்தொகை திட்டத்தையும் மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது. சத்தம் போடாமல் சொத்து வரியை உயர்த்தியதன் மூலம் சத்தம் போடாமல் சங்கு அறுக்கும் வேலையில் திமுக அரசு ஈடுபட்டுள்ளது. ஓட்டு போட்ட மக்களை ஏமாற்றி கோமாளியாக்கி விட்டது . கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை. பழைய வரிதான் மக்கள் செலுத்தி வந்தனர். இன்றைக்கு சிவகாசி மாநகராட்சிக்கு 150 சதவீதம் வரி ஏற்றினால் மக்கள் பெரும் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

சிவகாசி மாநகராட்சியில் கூலித்தொழிலாளர்கள், பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்கள் அதிகம் வாழ்கின்றனர். இன்றைக்கு திடீரென்று சொத்து வரியை நீங்கள் உயர்த்தினால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். வரிகட்ட முடியாமல் வீட்டை விற்க கூடிய சூழ்நிலைதான் ஏற்படும். வீட்டுவரி ஆயிரம் ரூபாய் கட்டுபவர்கள் வருடத்திற்கு 2500 ரூபாய் கட்டச் சொன்னால் வீட்டு வாடகையை உயர்த்தி விடுவார்கள். வாடகைக்கு குடியிருப்பவர்கள் வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். வீட்டு உரிமையாளரும் கஷ்டப்படுவார்கள். பொதுமக்கள் கடுமையான பாதிப்பை சந்திப்பார்கள். சொத்து வரி உயர்வை உடனடியாக திமுக அரசு திரும்பப் பெற வேண்டும். சொத்து வரி உயர்வை ரத்து செய்து அரசாணை பிறப்பிக்க வேண்டும். சிவகாசியில் தற்போது பட்டாசு, தீப்பெட்டி தொழில் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றது. இதில் சொத்து வரியை நீங்கள் கூட்டினால் பெரிய பாதிப்பை சிவகாசி மக்கள் சந்திப்பார்கள். மூலப்பொருட்களின் விலை உயர்வால் தீப்பெட்டித் தொழில் முற்றிலும் முடங்கி போய் உள்ளது. பட்டாசு விதிக்கப்பட்ட 25 சதவீத ஜிஎஸ்டி வரியை 18 சதவீதமாக கடந்த திமுக ஆட்சியில்தான் எனது முயற்சியால் தான் குறைக்கப்பட்டது. தீப்பெட்டிக்கு விதிக்கப்பட்டிருந்த 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 12 சதவீதமாக குறைத்ததும் கடந்த அதிமுக ஆட்சியில்தான் எனது முயற்சியில் தான் நடைபெற்றது. அதனால்தான் இன்றைக்கும் தீப்பெட்டி, பட்டாசு தொழில் கொஞ்சமாவது உயிரோடு இருக்கின்றது. இன்று பட்டாசு தொழிலுக்கு ஏற்பட்டு இருக்கின்ற நெருக்கடியான சூழ்நிலையை யாருமே கண்டு கொள்ளவில்லை. பட்டாசு, தீப்பெட்டி, விவசாய தொழிலையோ யாருமே கண்டு கொள்ளவே இல்லை. பட்டாசு தொழிலாளர்கள் வேலை இன்றி வீதியில் நிற்கின்றனர்.

எப்ப திறப்பாங்க எப்ப பூட்டுவாங்க, வேலை எப்ப கிடைக்கும் என்று தெரியாமல் சிவகாசி மக்கள் பரிதவித்து நிற்கின்றனர். சிவகாசியில் பட்டாசு பிரச்சனை பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. மூலப்பொருட்களின் விலை உயர்வால் தீப்பெட்டி ஆலைகள் தற்போது மூடியுள்ளனர். இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை எல்லாம் மாற வேண்டும் என்று சொன்னால் ஆளுகின்ற திமுக அரசு மக்கள் நலனில் கருத்தில் கொண்டு சொத்து வரி உயர்வை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். பட்டாசு, தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்று சொன்னால் அதனுடைய சாதக பாதங்களை திமுக ஆட்சி சந்திக்க நேரிடும். உள்ளாட்சியில் ஆளும் கட்சிக்கு தான் ஓட்டு போட வேண்டும் என்ற எண்ணத்தில் மக்களும் திமுகவிற்கு வாக்களித்துள்ளனர். ஓட்டு போட்டு ஒரு மாதம் கூட ஆகவில்லை சொத்துவரியை கூட்டிவிட்டனர். அடுத்து பஸ் கட்டணம், சினிமா டிக்கெட் கட்டனததையும் உயர்த்த உள்ளனர். பால், தயிர், நெய் உட்பட எல்லா பொருட்களின் விலையையும் உயர்த்தி விட்டனர். இப்படியே எல்லா பொருட்களின் விலைகளையும் உயர்த்திக் கொண்டே போனால் இன்னும் 2 ஆண்டுகளில் மூன்று மடங்கு விலை உயர்ந்து விடும். திரையரங்கில் சினிமா டிக்கெட் விலையையும் உயர்த்தி உள்ளனர் எல்லா பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டே வருகின்றனர் அவர்கள் வாழ்வதற்காக மக்களை பழிகேடாக்கின்றனர். சொத்து வரி உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

மக்கள் எப்போதும் போல் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ அண்ணா திமுக தொடர்ந்து குரல் கொடுக்கும். இது புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய கட்சி. இந்த கட்சியை அழிக்க எந்த கொம்பனாலும் முடியாது . அண்ணா திமுகவில் இருப்பதே பெருமை. அண்ணா திமுகவை விட்டு வெளியேறி சென்றவனுக்கு சிறுமைதான் வந்து சேறும். ஆகவே இயக்கத்தை விட்டு சென்றவர்களை பற்றி கவலைப்பட வேண்டாம். இயக்கத்தின் ஆணிவேராக ரத்த நாளங்களாக லட்சம் தொண்டர்கள் இருக்கின்றனர். ஆகவே அண்ணா திமுக என்றைக்கும் விருட்சகரமாக வளர கூடிய இயக்கம். ஆலை அதிபர்களையோ, மிகப்பெரிய கோடீஸ்வரர்களையோ, தொழில் அதிபர்களையோ நம்பி புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இந்த இயக்கத்தை ஆரம்பிக்கவில்லை. பட்டாசு தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுபவர்கள், மூட்டை தூக்கும் தொழிலாளி இப்படி கூலித் தொழிலாளர்களை நம்பிதான் இந்த இயக்கத்தை புரட்சித்தலைவர் ஆரம்பித்தார். ஆகவே அண்ணா திமுகவை யாராலும் அழிக்க முடியாது. புரட்சித் தலைவர் என்ற புனிதர் ஆரம்பித்த கட்சி இந்த இயக்கம். மீண்டும் அண்ணா திமுக ஆட்சியைப் பிடிக்கும். தமிழகத்தில் அம்மாவின் ஆட்சி மீண்டும் மலரும். அது உறுதி என்று பேசினார்

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன். ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ். சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எஸ்.ஆர்..ராஜவர்மன், ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா, மாவட்ட ஊராட்சித் தலைவர் வசந்த்திமான்ராஜ், துணைத்தலைவர் சுபாஷினி, முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன்,விருதுநகர் மாவட்ட கழக அவைத் தலைவர் வழக்கறிஞர் விஜயகுமார், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் கலாநிதி அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியன், விருதுநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் எஸ்.என்.பாபுராஜ், விருது மேற்கு மாவட்ட மாணவரணி செயலாளர் எஸ்.எஸ்.கதிரவன், விருதுநகர் மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கிருஷ்ணராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் கே.கே.பாண்டியன் மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் வழக்கறிஞர் முத்துபாண்டியன், ராஜபாளையம் வழக்கறிஞர் கனகராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் முத்தையா, மாவட்ட மீனவர் அணி செயலாளர் காசிராஜன், மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் விஜய் ஆனந்த், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தெய்வம், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் சேதுராமன், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் முத்துராஜ், விருதுநகர் மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் பாண்டியராஜன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சி முருகன், கலை பிரிவு மாவட்டச் செயலாளர் மூக்கையா, அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் அம்மா பேரவை பிலிப்வாசு, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் திருமுருகன், அண்ணா தொழிற்சங்க இணைச்செயலாளர் சங்கரலிங்கம் துணைச் செயலாளர் குருசாமி தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணைச் செயலாளர் கருப்பசாமிபாண்டியன், விருதுநகர் ஒன்றியக் கழகச் செயலாளர்கள் தர்மலிங்கம், கண்ணன், மச்சராசா, சிவகாசி ஒன்றிய கழகச் செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, ஆரோக்கியம், லட்சுமிநாராயணன், வெங்கடேஷ், விருதுநகர் நகர கழக செயலாளர் நயினார் முகம்மது, சிவகாசி நகரக் கழகச் செயலாளர் அசன்பதுருதீன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர் மயில்சாமி, வத்ராப் ஒன்றிய கழகச் செயலாளர்கள் சுப்புராஜ், சேதுவர்மன், ராஜபாளையம் ஒன்றியக் கழகச் செயலாளர்கள் குருசாமி, நவரத்தினம், சேத்தூர் நகரக் கழகச் செயலாளர் பொன்ராஜ்பாண்டியன், ராஜபாளையம் நகர கழக செயலாளர் பரமசிவம், வக்கீல் துரை முருகேசன், சிவகாசி மாமன்ற உறுப்பினர்களை கரைமுருகன், சாந்திசரவணகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜெகத்சி பிரபு, ஆழ்வார் ராமானுஜம், சுடர்வள்ளி, விருதுநகர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் முத்துலட்சுமிதர்மலிங்கம், விருதுநகர் நகர்மன்ற உறுப்பினர்கள் டி.பி.எஸ்.வெங்கடேஷ், சரவணன், மிக்கேல் ராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் மாதவன், சங்கர், முன்னாள் கவுன்சிலர் கணேஷ்குரு, மாவட்ட கவுன்சிலர் வேல்முருகன், திருத்தங்கல் முன்னாள் நகர கழக செயலாளர் சரவணகுமார், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, கோவில்பிள்ளை, திருத்தங்கல் அம்மா பேரவை செயலாளர் ரமணா ராஜபாளையம் அழகுராணி, மாவட்ட கவுன்சிலர் நர்மதாஜெயக்குமார், ராஜபாளையம் பால்வளத்தலைவர் வனராஜ், செட்டியார்பட்டி பேரூர் கழக செயலாளர் அங்குதுரைபாண்டியன், சுந்தரபாண்டியம் பேரூர் கழக செயலாளர் மாரிமுத்து, கொடிக்குளம் பேரூர் கழக செயலாளர் சங்கரமூர்த்தி, வத்திராயிருப்பு பேரூர் கழக செயலாளர் வைகுண்டமூர்த்தி, வ.புதுப்பட்டி பேரூர் கழக செயலாளர் ஜெயகிரி, சேத்தூர் பேரூராட்சி, எஸ்.கொடிக்குளம் பேருராட்சி, வத்திராயிருப்பு பேரூராட்சி, சுந்தரபாண்டியன் பேரூராட்சி, செட்டியார்பட்டி பேரூராட்சி, வ.புதுப்பட்டி பேரூராட்சி, மம்சாபுரம் நிர்வாகிகள் மம்சாபுரம் பேரூர் கழக செயலாளர் ராஜேஷ்குமார், ராஜபாளையம் பொதுக்குழு உறுப்பினர்கள் முருகையாபாண்டியன், சித்துராஜபுரம் பாலாஜி, அருணாநாகசுப்பிரமணியன், தமிழரசி கணகராஜ், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் ராமராஜ்பாண்டியன், எதிர்க்கோட்டை ஆர்.ஆர்.மணிகண்டன், சாத்தூர் முன்னாள் நகர கழக செயலாளர் வாசன், சத்தியமூர்த்தி, சிவகாசி ஒன்றிய இளைஞரணி செயலாளர் கே.டி.சங்கர், சிவகாசி நகர இளைஞரணி செயலாளர் கார்த்திக், மாவட்ட கவுன்சிலர் மகாலட்சுமி முத்துகிருஷ்ணன்
மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட கழக ஒன்றிய கழக நகர கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *