• Wed. Dec 11th, 2024

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கழக நிர்வாகிகள் இன்று கே.டி.ராஜேந்திரபாலாஜியுடன் சந்திப்பு…

Byகாயத்ரி

Apr 5, 2022

விருதுநகர் மேற்கு மாவட்ட கழகத்தில் அண்ணா தொழிற்சங்கத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் இன்று திருத்தங்கல் பாலாஜி நகரிலுள்ள விருதுநகர் மேற்கு மாவட்ட தலைமையகத்தில், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும்,முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜியை நேரில் சந்தித்து ஆசிபெற்று மகிழ்ந்தனர். மேலும் நிகழ்வின்போது முன்னாள் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் டி.ராதாகிருஷ்ணன், கழக எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச்செயலாளரும், முன்னாள் சாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான M.S.R.ராஜவர்மன் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் E.M.மான்ராஜ் உடனிருந்தனர்.