புதுக்கோட்டையில் அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் மற்றும் திமுக நிர்வாகிகள் பங்கேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து தமிழ்நாட்டை தலை குனிய விடமாட்டேன் என உறுதிமொழி ஏற்றனர். தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதா சாரத்தை குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவறைக்கு எதிராக போராடுவேன், வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை பறிக்கும் SIR -க்கு எதிராக நிற்பேன் எனவும் உறுதி மொழி ஏற்றனர்..