சிவகாசி சட்டமன்றத் தொகுதியை சேர்ந்த தே.மு.தி.க நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர், விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அஇஅதிமுகவில் இணைந்தனர்.
மேலும் இந்நிகழ்வின்போது, திருத்தங்கல் முன்னாள் நகர கழக செயலாளர் சரவணக்குமார், திருத்தங்கல் நகர அம்மா பேரவை செயலாளர் ரமணா, விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர் பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.