• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தி.மு.க. அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

ByA.Tamilselvan

Jul 8, 2022

முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய இடங்களில் ரெய்டு மற்றும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு எடப்பாடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:- அ.தி.மு.க.வை அரசியல் ரீதியாக நேரடியாக எதிர்கொள்ள முடியாத தி.மு.க. அரசு, முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் மீதும் அவரது நண்பர்கள், உறவினர்கள் மீதும் அரசியல் பழிவாங்கும் நோக்கத்தில் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்து வது கண்டிக்கத்தக்கது. அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.