• Sat. Sep 26th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

புன்னையடியில் திமுக-காங்கிரஸ் கட்சியினர் வீடு வீடாக வாக்கு சேகரிப்பு

கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்துக்கு ஆதரவாக கை சின்னத்தில் வாக்கு கேட்டு திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் தென்தாமரைகுளம் பேரூராட்சிக்குட்பட்ட புன்னையடி, தேங்காய்காரன் குடியிருப்பு, ஈச்சன்விளை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தனர்.
பூத் பொறுப்பாளர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி தலைமையில் நடைபெற்ற பிரசாரத்தில் தென்தாமரைகுளம் பேரூர் திமுக செயலாளர் பூவியூர் காமராஜ், திமுக நிர்வாகிகள் ஷேம், ஜேக்கப், மாணிக்கம், ஏசுவடியான் காங்கிரஸ் நிர்வாகிகள் சைமன் வினோ, ராமச்சந்திரன், அன்பு ஜோஸ்வா உட்பட பலர் பங்கேற்றனர்.