மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கிருத்திகா தங்க பாண்டியன் திருப்பரங்குன்றம் அனுப்பானடி, மேல அனுப்பானடி, ஹவுசிங் போர்டு, பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து பிரச்சாரத்தில் திமுக வேட்பாளர்கள் தங்கபாண்டியன் பேசும்போது: திருப்பரங்குன்றத்தில் உதயசூரியன் உதிக்க வேண்டும் என்பதற்காக உங்களிடம் வாக்கு கேட்டு வந்துள்ளேன் எல்லோருடைய வீட்டிலும் நம் தலைவர் உடைய திட்டம் இருக்கிறது. வாக்குறுதிகள் யார் வேண்டுமானாலும் கொடுக்கலாம் போன முறை வாக்குறுதி கொடுத்தார் அதை செய்து காட்டியவர். இல்லத்தரசிகளுக்கு மின்சாதன பொருட்கள் கொடுப்பதற்காக கூப்பன் வழங்கியுள்ளார் எதிர்க்கட்சியினர் பிரிட்ஜ் கொடுக்கப் போறேன் என்று சொல்கிறார்கள் உங்கள் வீட்டில் எத்தனை பேர் இடம் பிரிட்ஜ் உள்ளது கை தூக்குங்கள் கண்டிப்பாக எல்லாருடைய வீட்டிலும் பிரிட்ஜ் உள்ளது. ஆனால் இந்த 8000 கூப்பனை வைத்து ஃப்ரிட்ஜ்,டிவி என எதை வேண்டுமானாலும் வாங்கலாம்.

இந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இந்த பகுதியில் பூங்கா அமைக்கப்படும். இப்பகுதியில் 33 ஆண்டுகளாக பாதாள சாக்கடை பிரச்சனை உள்ளது. அதுவும் நிச்சயமாக தீர்த்து வைக்கப்படும், வார சந்தை தினசரி சந்தையாக மாற்றப்பட்டு வியாபாரிகளுக்கு புதிய சந்தைகளுக்கான கட்டிடம் கட்டி தரப்படும். சமுதாயக்கூடம் கட்டித் தரப்படும். இப்பகுதியில் அரசு பள்ளி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நான் திருப்பரங்குன்ற சட்டமன்ற உறுப்பினராக கோட்டைக்கு சென்றவுடன் இந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவேன். என்றார் தொடர்ந்து அங்கு கூடியிருந்த பெண்களிடம் வேற ஏதும் கோரிக்கைகள் உள்ளதா என்ற கேள்வியை எழுப்பினார். கல்வி நிதியை தராமல் ஒன்றிய அரசு வஞ்சித்து வருகிறது. மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் பணத்தை நிறுத்தி வைக்க போகிறார்கள் என்று தகவல் தெரிந்த உடனே வங்கி கணக்கில் செலுத்தியவர் முதல்வர். திருப்பரங்குன்றத்தில் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் நான் புதியவர் இல்ல என்னை எப்போதும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம். யார் மக்களுக்கு நல்லது செய்தார்கள் செய்யவில்லை என்று பிரித்து பார்த்து வாக்களியுங்கள்.



