• Sun. Jul 26th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

சிலம்பாட்டம் ஆடி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்..,

BySeenu

Apr 7, 2026

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பீளமேடு மற்றும் பீளமேடு புதூர் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கே ஆர் ஜெயராம் தீவிர வாக்கு சேகரத்தில் ஈடுபட்டார். முன்னதாக அதிமுக சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக ராட்சத கிரேன் மூலம் பழங்களான ராட்சத மாலையை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து சிலம்பாட்டம் ஆடும் குழுவினருடன் சிலம்பாட்டம் ஆடி வாக்குகள் சேகரித்தார். சிலம்பாட்டம் ஆடிய குழந்தைகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். பின்னர் தேநீர் கடையில் பொதுமக்களுடன் அமர்ந்து தேநீர் சாப்பிட்டு தொகுதி பிரச்சனைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து சாலை மார்க்கமாக வாகன பேரணியும், குடியிருப்பு பகுதிகள் நிறைந்த இடங்களில் நடந்து சென்று பொது மக்களை சந்தித்து அதிமுக வாக்குறுதி திட்டங்களை எடுத்துரைத்து இரட்டை இலைக்கு வாக்குகளை சேகரித்தார். உடன் கூட்டணி கட்சியினர் மற்றும் அதிமுகவினர் என ஐநூறுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்..