திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே தமிழ்நாட்டுக்கு திட்டங்கள் இல்லை. அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டர் இல்லை என திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்து கொண்டார். மேலும், திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், தேமுதிக, சிபிஐ, சிபிஎம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக உட்பட பல்வேறு கூட்டணி கட்சிகள் கலந்து கொண்டனர்.
பின் செய்தியாளர்களை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி சந்தித்து பேசும்போது:
“கேஸ் தட்டுப்பாட்டிற்கு மோடி அரசு முழு பொறுப்பேற்க வேண்டும்.
மோடி அரசு வெளியுறவுக் கொள்கையில் தோற்றுப் போய் உள்ளது. இந்த ஆபத்து நமக்கும் வரும். காசா மற்றும் ஈரான் மீது தாக்குதல் நடத்தும் பொழுது வாய் மூடி அமைதியாக இருந்துவிட்டு தற்போது நமக்கு அடிப்படை பிரச்சனை எவ்வளவு தூரம் செல்லும் என தெரியாது. மத்திய அரசு உள்நாட்டில் மாநிலங்களை வஞ்சிக்கிறது, பலி வாங்குகிறது. இந்தியா முழுவதும் சுற்றி வளைத்து கைப்பற்ற வேண்டும் என நினைக்கின்றனர். அது நடக்காது. முதலமைச்சர் ஸ்டாலின் இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகளை இணைத்து இந்தியாவில் புதிய ஆட்சியை உருவாக்குவார்.
கேஸ் தட்டுப்பாடு இருக்கும் நேரத்தில் தேர்தல் அறிவிப்பது சரியானதாக இருக்குமா? என்ற கேள்விக்கு போர் தொடுத்தது இஸ்ரேல் ஆனால் அங்கேயே சென்று அதிபரை கட்டிப்பிடித்து வருகிறார் மோடி.
இந்திரா காந்தி சோவியத் யூனியனுடன் வெளிநாட்டு கொள்கை வைத்திருந்தார். உலகிலேயே பணக்காரன் நாடாக அமெரிக்க என கூறுவார்கள். ஆனால் கொள்கைதான் முக்கியம் என வைத்திருந்தார். அமெரிக்க இந்தியாவிற்கு வரி விதித்து தேய்க்க வேண்டும், அழிக்க வேண்டும் என நினைக்கின்றனர். வெளிநாட்டில் பத்தாண்டு காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மோடி என்ன செய்தார் என்று தெரியவில்லை.

2026 சட்டமன்றம் மற்றும் 2029 நாடாளுமன்றம் இரண்டு தேர்தலிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி படுதோல்வி அடையும்.
சிபிஐ விசாரணை வைத்து த.வெ.க தலைவர் விஜய்க்கு தேசிய ஜனநாயக கூட்டணி அழுத்தம் கொடுக்கிறதா? என்ற கேள்விக்கு குறுக்கு வழி மற்றும் கொள்ளை புற வழியில் தான் அவர்களின் ஆட்சியை இந்தியா முழுவதும் கொண்டு வருகின்றனர்.
கொள்ளை புறமாக தமிழ்நாட்டிலும் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என முயற்சிக்கின்றனர்.
எங்களது முதல்வர் நேர்வழியில் வந்தவர். குறுக்கு வழியில் வந்தவர் இல்லை அதனால் தான் எதிர்த்து போராடுகிறார். எவ்வளவு நிதியை மறுத்தாலும், நான் உன்னை எதிர்ப்பேன் உன் கொள்கையை எதிர்ப்பேன். எங்களின் உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டேன். தமிழ்நாட்டின் உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் வேண்டும் எனக் கூறும் எடப்பாடி தற்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் தேர்தல் முடியும் வரை வைத்திருந்து பின் பாஜக கொண்டுவர நினைக்கின்றனர். பீகாரில் 10 முறை இருந்த நித்திஷ் குமாரை வீட்டிற்கு அனுப்பி விட்டனர். எடப்பாடி ஒரு நொடி கூட தாங்குவாரா?
எந்த வகையிலும் தேசிய ஜனநாயக கூட்டணி கொள்கையிலும் அரசியல் கூட்டணியாக இல்லை. தமிழ்நாட்டில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி தற்போது வரை தே.ஜ ஆட்சி என்றே கூறி வருகின்றனர். முதல்வர் யார் என்று அவர்களே முடிவு செய்வார்கள்.
இன்று முதல்வர் எனக் கூறுகிறார் நாளை இவர் முதல்வர் இல்லை என்று கூறினால் என்ன செய்வீர்கள்? என அமைச்சர் ஐ பெரியசாமி அதிமுகவிற்கு கேள்வி
முழுக்க முழுக்க ஏமாற்று வேலை மற்ற மாநிலங்களில் இதே வேலைதான் நடந்தது ஆனால் தமிழ்நாட்டில் செல்லாது.
பிரதமர் மோடியின் குறுக்கு வழி அரசியலுக்கு யாரை கொண்டு வந்தாலும் மக்கள் மத்தியில் எடுபடாது. குறிப்பாக தமிழ்நாட்டில் எடுபடாது. நிச்சயம் தமிழ்நாட்டில் தோற்று தான் போவார்கள். இடதுசாரிகள் கூடுதலான தொகுதிகள் கேட்டது குறித்த கேள்விக்கு கூடுதலான தொகுதிகள் கேட்பது அவர்களின் உரிமை இதுகுறித்து முதலமைச்சர் முடிவு செய்வார். இடதுசாரிகள் கூடுதலான தொகுதிகள் கேட்டது குறித்த கேள்விக்கு கூடுதலான தொகுதிகள் கேட்பது அவர்களின் உரிமை இதுகுறித்து முதலமைச்சர் முடிவு செய்வார். கேஸ் தட்டுப்பாடு இருக்கும் நேரத்தில் தேர்தல் அறிவிப்பது சரியானதாக இருக்குமா? என்ற கேள்விக்கு
நெப்போலியன் பல போர்களில் வெற்றி பெற்றார். ஆனால் ரஷ்யாவிற்கு சென்று உயிரிழந்தார். அதே நிலைதான் அமெரிக்காவிற்கும் வரும் ட்ரம்ப்-பால் எதுவும் செய்ய முடியாது. நாடுகள் மீது போர் தொடுத்து விரிவு செய்ய நினைக்கிறார். அது நடக்காது.
லயோலா கல்லூரி நடத்திய கருத்துக்கணிப்பில் த.வெ.க முதல் இடத்திலும் திமுக இரண்டாம் இடத்திலும் இருப்பதாக கூறியிருப்பது குறித்த கேள்விக்கு
கருத்துக் கணிப்பு அனைத்தும் பொய். இது கருத்து கணிப்பு இல்லை கருத்து திணிப்பு. இவ்வாறு அவர் கூறினார்.



