

தென்காசி மாவட்டம் கடையம் திமுக தெற்கு ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம், தெற்கு ஒன்றிய பொருப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், கடையம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் மகேஷ் மாயவன், மாவட்ட பஞ்சாயத்துதலைவி தமிழ்ச்செல்வி, கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெகதீஸ், மாணவரணி துணை அமைப்பாளர் மாரியப்பன் உட்பட மாவட்ட, ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


