• Fri. Aug 14th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கே.ஜி., கல்வி குழுமம் சார்பில் திவ்யலட்சுமி நினைவு விருது..,

BySeenu

Mar 8, 2026

கே.ஜி., கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் திவ்யலட்சுமியை நினைவு கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் சிறந்த பெண் சாதனையாளர்களுக்கு, விருதுகள் வழங்கப்படுகின்றன.

அதன் படி ஏழாவது ஆண்டாக திவ்யலட்சுமி நினைவு விருதுகள் வழங்கும் விழா சரவணம்பட்டி கே.ஜி.ஐ.எஸ்.எல்.,கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

கே.ஜி., குழுமத்தின் தலைவர் டாக்டர் பக்தவத்சலம், கே.ஜி.ஐ.எஸ்.எல்.அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவத்சலம் ஆகியோர் தலைமையில் விழா நடைபெற்றது.

தொடர்ந்து நிகழ்ச்சியில்,,இந்திய இராணுவத்தின் நர்சிங் துறையில் தமிழகத்தின் முதல் பெண் மேஜர் ஜெனரல் இக்னாட்டியஸ் ஃபுளோரா,சமூக சேவகர்கள் சோபனா தங்கம் சுந்தர்,சகாய ஏஞ்சலின் ஷாலினி,பரதநாட்டிய சாதனையாளர் திவ்யா,பரிதி மங்களம்பள்ளி, இஸ்ரோவில் பணியாற்றும் பெண் விஞ்ஞானி வசந்தகுமாரி, கே.ஜி.ஐ.எஸ்.எல்.கல்லூரியின் முன்னாள் மாணவியும், இந்திய குடிமை பணிகள் முதல் தேர்விலேயே தேர்ச்சி பெற்று கவனம் ஈர்த்த டார்த்தி ஆகிய ஏழு மகளிர்க்கு திவ்யலட்சுமி நினைவு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய கே.ஜி., கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவத்சலம், தற்போது அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதனையாளர்களாக மாறி வருவதாக கூறிய அவர்,அதன் பொருட்டு பெண்களை ஊக்குவிக்கும் விதமாக திவ்யலட்சுமி நினைவு விருதுகளை வழங்கி வருவதாக தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது ஆத்விக் கோவிந்த் அசோக் உடனிருந்தார்.