தமிழில் பிரபல ஸ்டாண்ட் அப் காமெடியனும், நடிகருமான கார்த்திக் குமார், நடிகை அம்ருதா சீனிவாசனை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். சென்னையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் இருவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாடகி சுசித்ராவை கார்த்திக் குமார் விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக, ரசிகர்கள் புதுமணத் தம்பதியை வாழ்த்தி வருகின்றனர்.