குமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளபெருக்கினால் பாதிப்பு ஏற்பட்டபோது உயிருக்கு போராடிய பொதுமக்களை காப்பாற்ற, மாவட்ட காவல்துறையினருடன் இணைந்து படகுடன் வந்து உதவி புரிந்த மேலமணக்குடி, ஆரோக்கியபுரம் மீனவ நண்பர்களை பாராட்டும் விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ. பத்ரிநாராயணன் IPS தலைமையில் மேலமணக்குடி அந்த்ரேயர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

அதில் உதவிசெய்த அனைத்து மீனவ நண்பர்களுக்கும் பொன்னாடை போர்த்தி, வெள்ளபெருக்கில் அவர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னார்வமாக வந்து உதவி செய்ததை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டி பேசினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா, காவல் அதிகாரிகள், ஆரோக்கியபுரம் பங்குதந்தை, மீனவ பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.