மாவட்டங்களுக்கு இடையேயான டேபிள் டென்னிஸ் போட்டி: சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
மதுரை ரேஸ் கோர்ஸ் ஸ்டேடியத்தில் மாவட்ட டேபிள் டென்னிஸ் மேம்பாட்டு சங்கம் சார்பில், மாநில அளவிலான 4 நாள் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது. இதனை தேசிய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு முன்னாள் துணைத் தலைவர் டி.வி.சுந்தர் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் முதல் முறையாக 22 மாவட்டங்கள் கலந்து கொண்டன. இதில் சென்னை ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. இதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் சங்க செயலாளர் வித்யாசாகர், மதுரை மாவட்ட டேபிள் டென்னிஸ் வளர்ச்சி சங்க செயலாளர் நாகராஜன் கணேசன், கௌரவ உறுப்பினர் பிரகதீஷ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.