• Wed. Jul 1st, 2026
WhatsAppImage2026-06-25at2148342
previous arrow
next arrow
Read Now

இந்தியாவின் முதல் இரு-நகர ரோபோடிக் அறுவை சிகிச்சை நெட்வொர்க்..,

BySeenu

Jul 1, 2026

சென்னை – கோவையை இணைக்கும் இந்தியாவின் முதல் இரு-நகர ரோபோடிக் அறுவை சிகிச்சை நெட்வொர்க்: GEM மருத்துவமனையின் ‘ஆபரேஷன் இன்ஃபினிட்டி’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இரைப்பை–குடலியல், மேம்பட்ட லேப்ராஸ்கோபிக் மற்றும் ரோபோடிக் க்ஷ்அறுவை சிகிச்சையில் இந்தியாவின் முன்னணி மருத்துவமனையான GEM மருத்துவமனை, சென்னை மற்றும் கோவை மையங்களை இணைக்கும் இந்தியாவின் முதல் இரு-நகர ரோபோடிக் அறுவை சிகிச்சை நெட்வொர்க் திட்டமான ஆபரேஷன் இன்ஃபினிட்டி (Operation Infinity) யை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் சென்னை மற்றும் கோவையில் உள்ள GEM மருத்துவமனைகளின் ரோபோடிக் அறுவை சிகிச்சை உள்கட்டமைப்புகள் நிகழ்நேரத்தில் (Real-time) இணைக்கப்பட்டுள்ளன. இதனால் இரு நகரங்களில் உள்ள நிபுணத்துவ மருத்துவர்கள் ஒரே அறுவை சிகிச்சையில் இணைந்து செயல்படவும், நேரடி ஆலோசனைகள் வழங்கவும், நோயாளியின் மருத்துவத் தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.

இது குறித்து GEM மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பழனிவேலு கூறுகையில், அதிநவீன ரோபாட்டிக்ஸ், அதிவேக இணைய இணைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் சுகாதாரத் துறையை புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்வதே எங்களின் நோக்கம். மருத்துவ நிபுணத்துவம் இனி ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே இருக்காது என்றும் அது நோயாளி இருக்கும் இடத்திற்கே சென்றடையும் எதிர்காலத்தை உருவாக்கி வருகிறோம்” என்றார்.