• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

தேனியில் மாவட்ட அளவில் கூடை பந்தாட்ட போட்டி….

Byvignesh.P

Jul 18, 2022

மாவட்ட அளவிலான கூடை பந்தாட்ட போட்டியில் பெரியகுளம் பாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிராமப்புறங்களில் ஏழ்மை நிலையில் படிக்கும் மாணவர்களில் விளையாட்டில் திறமையுள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சிகளை அழித்து அவர்களை விளையாட்டில் சிறந்த வீரர்களாக உருவாக்குவதற்காக பாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி துவக்கப்பட்ட முதலாம் ஆண்டை முன்னிட்டு மாவட்ட அளவிலான கூடை பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றது.

இந்த கூடை பந்தாட்ட போட்டியில் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, போடி, கம்பம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 14 அணிகள் பங்கேற்றது.இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த கூடை பந்தாட்ட போட்டிகள் நாக்கு முறையில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இறுதி போட்டியில் பெரியகுளம் பாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணிக்கும் வடுகபட்டி பேஸ்கட் பால் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணிக்கும் இடையே நடைபெற்ற இறுதி போட்டியில் பாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி 74 க்கு 69 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று முதலாம் ஆண்டு கோப்பையை வென்றது.

இதனைத் தொடர்ந்து பாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி அமைப்பாளர்கள் முதலிடம் பிடித்த பாப் ஸ்போர்ட்ஸ் அகடமி அணிக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு தொகை மற்றும் கோப்பையும், இரண்டாம் இடம் பிடித்த வடுகபட்டி பேஸ்கட் பால் ஸ்போர்ட்ஸ் அணிக்கு கோப்பை மற்றும் 8 ஆயிரம் ரூபாய் பரிசு தொகையும் வழங்கினார்.