• Tue. Feb 18th, 2025

பூஸ்டர் தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர்

தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் பூஸ்டர் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் கோபாலசுந்தரராஜ் துவக்கி வைத்தார்.

தென்காசி மாவட்டம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் வைத்து முன்கள பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ள பெரியவர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் தலைமையில் துவங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார், தென்காசி சட்ட மன்ற உறுப்பினர் பழனி நாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா, வாசுதேவநல்லூர், சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சிவபத்மநாதன், வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செல்லத்துரை, மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்செல்வி, தென்காசி யூனியன் சேர்மன் சேக் அப்துல்லா பங்கேற்றனர்.

2 டோஸ் முழுமையாக செலுத்திக் கொண்டு 9 மாதங்கள் பூர்த்தி செய்தவர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம் எனவும் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ள முன்பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆகவே தகுதியான நபர்கள் தங்களுக்கு அருகாமையில் நடைபெறும் தடுப்பூசி முகாம் களுக்கு ஆதார் எண் மற்றும் கைபேசியுடன் சென்று பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர்ராஜ் தெரிவித்தார்.