விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள வெங்கடாசலபுரம் கிராமத்தில் வீட்டு நிகழ்ச்சிக்காக வைக்கப்பட்ட அதிமுக கட்சி பேனரை அதே பகுதியைச் சேர்ந்த திமுக ஒன்றிய கவுன்சிலர் காவல் துறை உதவியுடன் அகற்றியதாக தெரிய வருகிறது.

அதிமுக பேனரை அகற்றி அந்த இடத்தில் திமுக கட்சி பேனரை கட்டியுள்ளனர்.
இந்த நிலையில் இதை அறிந்த சாத்தூர் மேற்கு ஒன்றிய கவுன்சிலர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதியில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அகற்றிய பேனரை மீண்டும் நிறுவ வேண்டும் என வலியுறுத்தி வாதாடினார்.
இதனை அடுத்து அப்பகுதியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது விடாப்பிடியாக போராடி வைக்கப்பட்டிருந்த திமுகவின் கட்சி பேனரை அகற்றிவிட்டு மீண்டும் அதே இடத்தில் அதிமுக கட்சி பேனரை மீண்டும் நிலை நிறுத்தி கட்சிக்கொடியை கட்டி பறக்க விட்டார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.