மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புத்துறையினரால் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
மதுரை மாவட்டம் அணுப்பனடி தீயணைப்பு மற்றும் மீட்புகள் பணி துறை சார்பில் நிலை அலுவலர் உதயகுமார், கணேஷ் மற்றும் அலுவலர்களும் வருவாய் துறை சார்பில் மதுரை தெற்கு வட்டாட்சியர் விஜயலட்சுமி, மண்டல துணை வட்டாச்சியர் வீரமணி அவனியாபுரம் வருவாயர் ஆய்வாளர் விமலா தேவி, கிராம நிர்வாக அலுவலர் சிவராமன், மதுரை மாநகராட்சி 92,100 வார்டு இளநிலை பொறியாளர் செல்வ விநாயகம், சுகாதார ஆய்வாளர் வனஜா மற்றும்அவனியாபுரம் காவல்துறையினர் பங்கேற்றனர்.
பேரிடர் காலங்களில் ஏற்படும் விபத்துகள் குறித்து தீயணைப்பு மற்றும் மீட்புகள் பணித்துறை நிலைய அலுவலர் உதயகுமார் அவர்கள் ஒத்திகை நிகழ்ச்சிகளை பொதுமக்கள் மற்றும் வருவாய் துறையினர் முன்பாக செய்து காட்டினார்.
இதன்மூலம் வடவடகிழக்கு பருவமழை காலங்களில் ஏற்படும் பேரிடர் விபத்துகளை தவிர்க்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக அமைந்தது.