

கனமழை, நிலச்சரிவு மற்றும் பல்வேறு இயற்கை பேரிடர் காலங்களில் எப்படி மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ளுவது என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி தென்காசியில் நடைபெற்றது.
கேரளா மாநிலத்தில் தற்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் தாக்கம் கேரளாவின் எல்லையில் அமைந்துள்ள தென்காசியிலும் இருக்கிறது. எனவே, தொடர்மழை காரணமாக தென்காசி பகுதியில் உள்ள எரிகள், குளங்கள், கண்மாய்கள் வேகமாக நிரம்பிவருகிறது. எனவே, தீடிரென இயற்க்கை பேரிடர் நிகழும் போது மக்கள் தங்களையும் தங்களது குடும்பங்களையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளுவது என்பது குறித்து செயல் முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
தென்காசி குற்ற பிரிவு காவல்துறையும், தீயணைப்பு துறையினரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இது குறித்து, தென்காசி குற்ற பிரிவு காவல்துறை இன்ஸ்பெக்டர் முருகேசன் கூறும்போது,. ‘தொடர் மழைப் பொழிவு நிகழ்வதால், குளங்கள், எரிகள் வேகமாக நிரம்பி வருவது விவசாயிகளிடம் மகிழ்ச்சியை தந்தாலும், மக்கள் நீர்நிலைகளின் ஆழம் தெரியாமல் குளிப்பதாலும், சிறுவர்கள் விளையாடுவதால் மாட்டிக்கொள்கின்றனர். இதனால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. இதுமட்டுமின்றி தீடிரென தொடர் மழை பெய்யத் துவங்கினாள் நீர்நிலைகள் உடையும் சுழலும் ஏற்படலாம். எனவே இது போன்ற காலங்களில் மக்கள் தங்களை எவ்வாறு பாதுகாப்பது என இந்த நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்தப்பட்டது’ என அவர் கூறினார்.