தமிழ் சினிமாவில் நாற்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பின்பு ‘அழகி’, ‘சொல்ல மறந்த கதை’, ‘பள்ளிக்கூடம்’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’, ‘களவாடிய பொழுதுகள்’ போன்ற காலத்தால் அழியாத தரமான திரைப்படங்களை இயக்கியவர் இயக்குநர் தங்கர்பச்சான். 2017க்கு பின் பிறகு தற்பொழுது ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ என்ற படத்தினை இயக்கி முடித்திருக்கிறார்
பி.எஸ்.என்.என்டர்டெயின்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட் என்ற புதிய நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தில் தனது மகன் விஜித் பச்சானை நாயகனாக அறிமுகம் செய்துள்ளார் இயக்குநர் தங்கர்பச்சான். நடிகர் முனீஸ்காந்த் நாயகனுக்கு இணையான முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் மிலனா நாகராஜ், அஸ்வினி என இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். மேலும் மன்சூர் அலிகான், ஸ்டன்ட் சில்வா மற்றும் யோகிராம் ஆகியோர் வில்லன்களாக நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு பிரபு தயாளன் – சிவ பாஸ்கரன், படத் தொகுப்பு – சாபு ஜோசப், கலை இயக்கம் – சக்தி செல்வராஜ், நடன இயக்கம் – தினேஷ், சண்டை இயக்கம் – ஸ்டன்ட் சில்வா.
இதுவரையில் கிராமத்து பின்னணியில் அழுத்தமான படைப்புக்களை தந்து கொண்டிருந்த இயக்குநர் தங்கர்பச்சான். இம்முறை சென்னை நகரத்தை மையமாக கொண்ட, முற்றிலும் மாறுபட்ட முழு பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த நகைச்சுவைப் படமாக இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க சென்னையை சுற்றி நடைபெற்றுள்ளது. படம் இறுதிகட்ட பணிகளை எட்டியுள்ள நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் நேற்று முன்தினம் வெளியானது. இளைஞர்கள் கொண்டாடும் இளமை ததும்பும் பாடல் வரிகளை வித்தியாசமாக எழுதி அனைவரையும் கவர்ந்துள்ளார் தங்கர்பச்சான்.
“தக்கு முக்கு திக்கு தாளம்
போடப் போறன்டா!
நம்ம பொண்ணுங்கள ஜிகுஜிகுன்னு
மாத்தப் போறன்டா!
சில்லாக்கி பில்லாக்கி சீனாக் குட்டியே
இந்த மாமாவ வாட்டாதடி சிலோன் ரொட்டியே!
புரோட்டாக்கு சால்னாவ போட்டா சூப்பரு
என்னக் கட்டிப் புடிச்சி கடிச்சிடேன்டி என் ஜிகுஜிகுச்சான்!..
என்று தங்கர்பச்சான் எழுதிய இப்பாடல் வெளியானவுடனேயே ரசிகர்களால் கொண்டாடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தங்கர்பச்சானா இப்படி ஒரு பாட்டை எழுதினார் என்று வியந்து கேட்கிறார்கள். இப்பாடலை , பட்டிதொட்டி எங்கும் புகழ் பெற்ற இசை அமைப்பாளர் தேவா, தனது காந்தர்வ குரலால் பாடி அசத்தியுள்ளார். செம குத்து பாடலாக தரண்குமார் இசை அமைத்துள்ளார். விரைவில் இந்தப் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் மற்றும் டீசர், டிரைலர் ஆகியவை வெளியாகவுள்ளது. இத்திரைப்படம் 2022 கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளது.
- மதுரை மருத்துவக்கல்லூரியை மேம்படுத்த ஒப்பந்த புள்ளி வெளியீடு..!மதுரை மருத்துவக்கல்லூரியை கூடுதல் வசதியுடன் மேம்படுத்த 30 லட்சம் மதிப்பீட்டில் ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.தென் மாவட்டங்களில் […]
- மதுரை தல்லாகுளம் பகுதியில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு..!மதுரை மாவட்டம், மதுரை தல்லாகுளம் பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டுள்ளது.மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் […]
- இன்று இந்திய இயற்பியலாளர் அல்லாடி ராமகிருஷ்ணன் நினைவு நாள்துகள் இயற்பியல், குவாண்டம் இயந்திரவியல், அணிக்கோவை இயற்கணிதம், சிறப்புச் சார்பியல் கொள்கை போன்றவற்றில் பங்களித்துள்ள, இந்திய […]
- கள் விற்பனை செய்தவர்கள் கைது..!மதுரை மாவட்டம், பேரையூர் அருகே கள் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம் […]
- திருப்பூர், கோவை, பல்லடம் பகுதியில் திருடிய டூவீலரை மதுரையில் விற்க முயன்ற 2 பேர் கைதுதிருப்பூர், கோவை, பல்லடம் பகுதியில் நூதன முறையில் விலையுயர்ந்த டூவீலரை திருடி., மதுரையில் ஒரிஜினல் RC […]
- ஒடிசா ரயில் விபத்து : உதவிக்கரம் நீட்டிய ரிலையன்ஸ் நிறுவனம்..!ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட ரிலையன்ஸ் நிறுவனம் முன்வந்துள்ளது.“பாதிக்கப்பட்டவர்களுக்கு 6 மாதங்களுக்கு கோதுமை […]
- ஆதார் விவரங்களை இலவசமாக மாற்ற 8 நாட்களே உள்ளன!அடிப்படை அடையாள ஆவணமாக கருதப்படும் மிக முக்கியமான ஆவணமாக ஆதார் அட்டை உள்ளது.ஆதாரில் உள்ளிடப்பட்ட தரவு […]
- டைரக்டர் என்.லிங்குசாமி – கனிமொழி எம்.பி திடீர் சந்திப்பு!கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ போட்டி தொகுக்கப்பட்ட ஹைக்கூ புத்தகத்தை கனிமொழி எம்.பியிடம் வழங்கிய […]
- திருப்பரங்குன்றம் அருகே மின்னல் தாக்கி பெண் பலிமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா கொம்படி கிராமத்த்தில் மின்னல் தாக்கி பெண் பலியான சம்பவம் பெரும் […]
- மதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் புதிய ஆரம்ப நகர்புற நல்வாழ்வு மையம் திறப்புமதுரை மாநகராட்சி மண்டலம் 5ல் உள்ள 94வது வார்டு மகாலட்சுமி காலணியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப […]
- ஜெயங்கொண்டம் அருகே 83 -84 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவர்கள் சந்திப்புஜெயங்கொண்டம் அடுத்துள்ள மீன்சுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில். 83 -84 ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு […]
- கடையநல்லூரில் புதிய ஏ.என்.பி.ஆர் கேமரா இயக்கத்தை காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்கடையநல்லூரில் புதிதாக அமைக்கப்பட்ட ஏ.என்.பி.ஆர் கேமரா இயக்கத்தை திறந்து வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி […]
- மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம்மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் மேயர் தலைமையில் நடைபெற்றதுமதுரை மாநகராட்சி […]
- அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் மண்டல அலுவலகம் முன்பாக […]
- நுழைவு தேர்வு இல்லாமல் சென்னை ஐஐடியில் சேரலாம்எந்தவொரு நுழைவுத் தேர்வும் இல்லாமல் சென்னை ஐஐடியில் சேர அற்புதமான ஒரு வாய்ப்பு இருக்கிறது.இந்தியளவில் டாப் […]