• Fri. Dec 13th, 2024

பாலிவுட்டில் தடம் பதிக்க இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்…

Byகாயத்ரி

Jul 19, 2022

கோலிவுட் இயக்குனர்களான அட்லீ, ஷங்கர் தற்போது பாலிவுட் பக்கம்தாவி இயக்கி வரும் நிலையில் தற்போது விக்ரம் பட வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ்-க்கு அடிச்சது ஜாக்பாட். இப்போது இந்த இயக்குனர்கள் வரிசையில் லோகேஷ்-ம் பாலிவுட்டில் களம் இறங்குகிறார்.

தமிழ் இயக்குனர்களுக்கு மற்ற மொழிகளில் இப்போது செம்ம வரவேற்பு உருவாகி உள்ளது. அந்த வகையில் ஷங்கர், லிங்குசாமி, வெங்கட் பிரபு போன்ற இயக்குனர்கள் தற்போது தெலுங்கு படங்களை இயக்க சென்றுவிட்டனர். தெலுங்கை தொடர்ந்து தற்போது இந்தியிலும் கோலிவுட் இயக்குனர்களுக்கு மவுசு அதிகரித்துள்ளது. தற்போது அங்கு அட்லீ இயக்கி வரும் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. அவர் பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.இயக்குனர் ஷங்கரும், ஹிந்தி படம் ஒன்றை இயக்க கமிட் ஆகி உள்ளார். அவர் இயக்கத்தில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நாயகனாக நடிக்க உள்ளார். இந்நிலையில், இந்த லிஸ்டில் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் இணைந்துள்ளார். இவர் விரைவில் பாலிவுட் படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும், இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் நாயகனாக நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அய்யோ… அப்போ செம விஷூவல் ட்ரீட் தான் என்று ரிகர்கள் துள்ளிகுதித்து வருகின்றனர்.