• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மீண்டும் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன்

ByA.Tamilselvan

Jul 11, 2022

சென்னையில் நடைபெற்றுவரும் பொதுக்குழ கூட்டத்தில் அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அ.தி.மு.க. பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் வகித்து வந்த ஒருங்கிணைப்பாளர் பதவி பறிக்கப்பட்ட நிலையில் பொருளாளர் பதவியில் மட்டுமே அவர் நீடித்து வந்தார். இந்த நிலையில் அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டதையடுத்து புதிய பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதற்கான முடிவும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்டுள்ளது. இவர் ஏற்கனவே இந்த பொறுப்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.