• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் சீத்தாராம் யெச்சூரி வாக்கு சேகரிப்பு …

Byதரணி

Apr 12, 2024

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சச்சிதானந்தம் -க்கு வாக்கு கேட்டு மாபெரும் பொதுக்கூட்டம் திண்டுக்கல் மணிக்கூண்டில் நடைபெற்றது. இதில் சி.பி.எம்-ன் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும், இந்நிகழ்வில் கழக துணை பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி,‌ திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில் குமார் மற்றும் கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.