• Sun. Apr 12th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

போலீஸ் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்ட டயானா…

வயது மூப்பின் காரணமாக மரணமடைந்த ‘டயானா’ என்ற மோப்ப நாய்க்கு காவல்துறை மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் ‘டயானா’ உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட மோப்பநாய்கள் துப்பறியும் பணியில் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக துப்பறியும் பணியில் ஈடுபட்ட டயானா என்ற மோப்பநாய் வயது மூப்பின் காரணமாக மரணம் அடைந்தது.

இந்த டயானா என்ற மோப்ப நாய் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் துப்பறியும் பணியை சிறப்பாக செய்துள்ளது. இந்நிலையில், மரணமடைந்த டயானாவின் உடல் ராமநாதபுரம் ஆயுதப்படை வளாகத்தில் வைக்கப்பட்டு, காவல்துறையினர் மாலையணிவித்து, 21 குண்டுகள் முழங்க போலீஸார் இறுதி மரியாதை செலுத்திய பின் நல்லடக்கம் செய்யப்பட்டது.