• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ஆஸ்கர் விருது தம்பதியினருடன் தோனி நேரில் சந்திப்பு

ByA.Tamilselvan

May 10, 2023

ஆஸ்கர் விருது வென்ற பொம்மன், பெள்ளி தம்பதியினரை சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி இன்று நேரில் சந்தித்தார்.
சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கர் விருதை வென்ற ‘தி எலிஃபண்ட் விஸ்ஃபரர்ஸ்’ படத்தின் இயக்குநர் கார்த்திகி, அப்படத்தில் யானை பராமரிப்பாளர்களாக வரும் பொம்மன், பெள்ளி தம்பதியினரை பல்வேறு தலைவர்கள் பாராட்டி வருகின்றனர்.சமீபத்தில், தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு நேரில் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, இந்த தம்பதிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.இந்நிலையில், சென்னையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சிஎஸ்கே அணியின் கேப்டனுமான தோனியை, பொம்மன் – பெள்ளி தம்பதியினர் இன்று நேரில் சந்தித்தனர். அவர்களுடன் படத்தின் இயக்குநர் கார்த்திகியும் உடனிருந்தார்.இவர்கள் மூவரையும் பாராட்டிய தோனி, அவர்கள் பெயருடன் 7-ஆம் எண் கொண்ட சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் சீருடையை பரிசாக வழங்கினார்.