• Mon. Mar 24th, 2025

காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் தர்ணா போராட்டம் – விஜய் வசந்த் எம் பி பங்கேற்பு

மத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் தர்ணா- போராட்டம் விஜய் வசந்த் எம் பி பங்கேற்பு
மத்திய அரசின் மக்கள் விரோத செயலை கண்டித்து திருவட்டார் காங்கிரஸ் கிழக்கு வட்டார ஓபிசி பிரிவு சார்பில் ஆற்றூர் சந்திப்பில் நடைபெற்ற மாலை நேர தர்ணா போராட்டத்திற்கு ஓ. பி. சி பிரிவு மாவட்ட தலைவர் ஸ்டூவர்ட் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு பேசியதாவது : மத்திய பாஜக அரசு மக்கள் விரோத ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது ,பொய் வாக்குறுதிகளை கூறி ஆட்சியில் வந்தவர்கள், இன்னும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மக்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள், பண மதிப்பிழப்பு, விவசாயிகள் பிரச்சனை, கேஸ் விலை உயர்வு போன்ற பல்வேறு நெருக்கடிகளை தந்து கொண்டிருக்கிறார்கள். இளம்தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கு பல்வேறு வழிகளில் நெருக்கடியை கொடுத்து , அவர் மேடையில் பேசிய ஒரு விஷயத்தை வைத்து அவருக்கு நெருக்கடி கொடுத்தது , தண்டனை கொடுத்து, அவரை பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தனர், பாஜக-வை பொறுத்தவரையில் அவர்கள் செய்வதுதான் சரி என்று கூறி அரசு நிறுவனங்களை தனியாரிடம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள், ஒரு சிலரை பணக்காரர்கள் ஆக்க வேண்டும் எனவும் , அவர்களை வைத்து லாபம் அடைய வேண்டும் எனவும் , செயல்படும் அவர்களின் செயல்பாட்டை கண்டித்து,மக்கள் தலைவர் ராகுல் காந்தி
2024 ஆம் ஆண்டு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வருவதற்காகவும், கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலும் மக்களை சந்தித்து பாரத் ஜோடோ யாத்திரை நடத்தினார். மூன்று, நான்கு மாதங்களாக மூவாயிரம் கிலோ மீட்டர் தூரத்தை நடந்தே கடந்து சென்றார், அது சாதாரண விஷயம் அல்ல மக்களை சந்தித்து , அவர்களின் குறைகளை கேட்டு மக்களுடன் இருக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் அந்த யாத்திரை நடத்தினார், அந்த எண்ணம் தான் இந்தியாவை ஒருங்கிணைக்கும், புதிய மாற்றத்தை கொண்டு வரும், அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு 2024 -ல் ராகுல் காந்தியை, பிரதமர் ஆக்குவதற்கு ஒருங்கிணைந்து செயல்படுவோம் இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் அகில இந்திய பொதுக் குழு உறுப்பினர் ரமேஷ் குமார், மாநில மீனவர் அணி தலைவர் ஜார்ஜ் ராபின்சன், மாவட்ட மகிளாக காங்கிரஸ் தலைவி ஷர்மிளா ஏஞ்சல், மாவட்ட கவுன்சிலர் செலின் மேரி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் மத்திய மோடி அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்து.