

பொள்ளாச்சி அருகில் உள்ள ஆனைமலை பகுதியில் சேர்ந்த தலித் சிறுவன் ஹரிஹரன் மூன்று ஆண்டுகளாக ஆனை மலை சார்ந்த மேஜர் ராமசாமி தோட்டத்தில் வேலை செய்து வருகிறார். அப்போது அங்கு பணிபுரிந்து வந்த ரஞ்சிதா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதை அறிந்த மேஜர் ராமசாமி தோட்டத்தில் பணிபுரியும் கூலி ஆட்களை கொண்டு ஹரிஹரனை தோட்டத்திற்கு வரவழைத்து கை கால்களை கட்டி போட்டு நகக்கண்களில் குண்டு வைத்து கொலைவெறி தாக்குதலை நடத்தியுள்ளார். தகவலறிந்து சென்ற உறவினர்கள் ஹரிஹரனை மீட்டு சகாரன்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஆனைமலை போலீசார் ராமசாமி மற்றும் அவரது ஆட்கள் மீது வழக்குப்பதிவு செய்து முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு உரிய பாதுகாப்பு வேண்டும் எனவும், பொள்ளாச்சி அருகே உள்ள கூமாட்டிவன கிராமத்தில் பழங்குடியின சிறுமிகளுக்கு பாலியல் தொல்லைகள் குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், இச்சம்பவத்தை மறைக்க காவல்துறையினர் முயற்சிப்பதாகவும், மேலும் தமிழக அரசு இச்சம்பவங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அனைத்து இயக்கங்கள் சார்பில் சார் ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடைபெற்றது!
