• Sun. Jul 12th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

தர்மதுரை இரண்டாம் பாகம் ரெடி – ஆர்.கே.சுரேஷ்…

Byமதி

Oct 17, 2021

வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் எடுப்பது தமிழ் சினிமாவில் வழக்கமான ஒன்றாகிவிட்டது. அந்த வகையில், எந்திரன், விஸ்வரூபம், பில்லா, சாமி, சண்டக்கோழி, வேலை இல்லா பட்டதாரி உள்ளிட்ட படங்களின் 2-ம் பாகங்கள் வந்துள்ளன. 

சூர்யாவின் சிங்கம் 3 பாகங்களும், அரண்மனை 3 பாகங்களும் வெளியாகியுள்ளது. தற்போது, இந்தியன், சந்திரமுகி படங்களின் இரண்டாம் பாகங்கள் தயாராகின்றன. அந்த வரிசையில் தற்போது தர்மதுரை இரண்டாம் பாகம் எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

2016-ல் வெளியாகி தர்மதுரை வசூல் மற்றும் விமர்சனம் ரீதியாக வரவேற்பை பெற்றது. இதில் விஜய்சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். சீனுராமசாமி இயக்கினார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார்.

தர்மதுரை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் டுவிட்டர் பக்கத்தில் தற்போது அறிவித்து உள்ளார். இதில் நடிக்கும் கதாநாயகன், கதாநாயகி, இயக்குனர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.