கோலிவுட்டில் ஹீரோவாக மட்டும் இல்லாமல், வில்லனாகவும் கலக்கி வருபவர் நடிகர் விஜய் சேதுபதி.. விஜய்யுடன் மாஸ்டர், ரஜினியுடன் பேட்ட, கமலுடன் விக்ரம் என டாப் ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்துவிட்டார். விக்ரம் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த விஜய் சேதுபதி கூறுகையில், “விஜய் சார் மிகவும் நல்ல மனிதர். மாஸ்டர் படப்பிடிப்பின் போது எனக்காக பகுதிகளை எனக்கேற்றார் போல மேம்படுத்துவேன். மேலும் அது விஜய் சாரை எந்த விதத்திலும் தொந்தரவு செய்துவிடக்கூடாது என்ற எண்ணமும் என்னிடம் இருந்தது.
அதேகாட்சியை வேறு கோணத்தில் அணுகும் ஐடியாவுடன் அவர் வந்திருப்பார் என்பதால் அவரிடம் இது குறித்து பேசுவேன். அவரோ ‘நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் நண்பா’ என்று முழு சுதந்திரத்தை எனக்கு கொடுத்து விடுவார். அது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது.
இத்திரைப்படத்தில் என் கதாபாத்திரத்திற்கென்று ஒரு ஐந்து இடங்களில் காட்சிகள் மிகவும் சிறப்பாக வந்திருக்கும். அவை சற்று கூடுதலாக இருக்கிறது என்று விஜய் சார் மட்டும் நினைத்திருந்தால் அதை உடனே கட் செய்திருக்க முடியும். ஆனால் அப்படி பண்ணல..
மாஸ்டர் படத்தின் டப்பிங்கில் நான் கொம்பு வைத்து பேசும் காட்சியை பார்த்து கைதட்டி சிரித்து விஜய் சார் என்னை பாராட்டினார்” என நடிகர் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.