• Sat. Nov 21st, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

தெப்பத்தில் வடத்தினை பிடித்து சுற்றிவந்த பக்தர்கள்..,

ByKalamegam Viswanathan

Jan 28, 2026

திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி தெய்வானை உடன் தெப்பத் திருவிழா நடைபெற்றது மின்னொளியில் பக்தர்கள் தெப்பத்தில் இருந்த வடத்தினை பிடித்து தெப்பக்குளத்தை சுற்றிவந்தனர்

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கடந்த 19 ந்தேதி தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று சட்டதேரோட்டம் நடைபெற்றது.சிகர நிகழ்ச்சியாக இன்று தெப்ப திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

திருவிழாவையொட்டி திருப்பரங்குன்றம் ஜி.எஸ்.டி.ரோட்டின் வடக்கு பகுதியில் உள்ள தெப்பக்குளத்தில் சுமார் 6½ அடி உயரத்துக்கு தண்ணீர் நிரப்பப்பட்டு தயார்படுத்தப்பட்டது. இந்த நிலையில் 24 அடி நீளமும், 24 அடி அகலமும், 28 அடி உயரமும் கொண்ட தெப்பத்தேர் அலங்கரிக்கப்பட்டு காலையில் தெப்பத்தை வலம் வந்தது.

.

பின்னர் இரவு மண்டபத்தில் இருந்து அம்பாளுடன் சுவாமி புறப்பட்டு, தெப்பத்தில் எழுந்தருளினார்.

இதனை தொடர்ந்து அங்கு குவிந்து இருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பி பரவசத்துடன் தெப்பத்துடன் இணைக்கப்பட்ட வடத்தினை பிடித்து இழுத்ததை தொடர்ந்து, மின்னொளியில் தெப்ப உற்சவம் தொடங்கியது.

இதே போல இரவில் மின்னொளியில் வாணவேடிக்கைகள் முழங்க தெப்பக்குளத்தின் மைய மண்டபத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் எழுந்தருளினார்.