• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

12 மணி நேரம் காத்திருந்து ஐயப்பனை தரிசிக்கும் பக்தர்கள்

ByA.Tamilselvan

Dec 10, 2022

சபரிமலையில் பக்தர்கள் வருகை அதிகமாக இருப்பதால் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஐயப்ப பக்தர்களின் வருகை குறைவாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால், சபரிமலையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தரிசனத்திற்கு முன்பதிவு செய்ய வேண்டும் என திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்திருந்தது.
தற்போது சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினமும் 18 மணி நேரம் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பக்தர்கள் தங்களுக்கான முன்பதிவு நேரத்தில் இருந்து சுமார் 12 மணி நேரம் காத்திருந்து தான் தரிசனம் பெற முடிகிறது. தினசரி அதிகபட்சமாக 1 லட்சத்து 20 ஆயிரம் பக்தர்களுக்கு தரிசனத்திற்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 9 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்த ஆண்டு நடை திறக்கப்பட்டதில் இருந்து நேற்று தான் அதிகபட்ச பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.