• Sat. Apr 27th, 2024

உதகையில் தொடர் சாரல் மழை – 67.4 மி.மீ மழை பதிவு…

உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 2வது நாளாக கடும் பனிமூட்டத்துடன் கூடிய தொடர் சாரல் மழைபெய்து வருகிரது அதிகபட்சமாக 67.4 மி.மீ மழை பதிவாகி உள்ளது. கடுங்குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகிய மாண்டஸ் புயல் காரணமாக உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் கடும் பணிமோட்டத்தனமும் கூடிய தொடர் சாரல் மழை பெய்து வந்தது.இதனை அடுத்து நேற்று இரவு புயல் கரையை கடந்த நிலையில் கனமழை கொட்டி தீர்த்தது.
இந்நிலையில் இன்று 2வது நாளாக உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் கடும் பனி மூட்டத்துடன் கூடிய தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அவதிக்குள்ளாகியுள்ள நிலையில் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு வாகனங்களை இயக்கி வருகின்றனர்.மேலும் தொடர் சாரல் மழையின் காரணமாக கடுங்குளிர் நிலவி வருவதால் பணிக்கு செல்வோர் மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மாவட்டத்தில் அதிகபட்சமாக உதகையில் 67.4 மி.மீ மழையும், கேத்தியில் 41 மி.மீ மழையும், கிளன்மார்கனில் 25 மி.மீ மழையும், நடுவட்டத்தில் 24 மி.மீ மழையும், கோடநாட்டில் 19 மி.மீ மழையும், கீழ் கோத்தகிரியில் 17 மி.மீ மழையும், கோத்தகிரியில் 11 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 281.4 மி.மீ மழையும், சராசரியாக 9.70 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *