• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடை

ByN.Ravi

May 19, 2024

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில், கனமழை எதிரொலி காரணமாக அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. குற்றாலம், பாபநாசம், தென்காசி பகுதிகளில் உள்ள அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், வைகை நதியில் அதிக தண்ணீரும், மலைப் பகுதிகளில் அதிகமான மழை பெய்து வருவதால் , சதுரகிரி சுந்தர மகாலிங்க பிரதோஷ தரிசனத்துக்கு பக்தர்கள் மலையேற அனுமதி இல்லை என தெரிவிப்பட்டுள்ளது.

மதுரை அருகே திருவேடகம், படுகை அணையில் வைகை அணையில் குழந்தைகள் உல்லாசமாக ஆடி பாடி குளித்து வருகின்றனர். தண்ணீர் அதிகம் வரும் காலங்களில், திருவேடகம் பாபா கோயில் அருகே படுகை அணையில் குழந்தைகள் குளிக்க தடை விதிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வைகாசி மாத பிரதோஷத்திற்கு சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதியில்லை.