விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலை கோவிலுக்கு பக்தர்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலைப் பகுதிகளில் தொடர் மழை மற்றும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி டிச.4ஆம் தேதி வரை பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.