• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

கார்த்திகை அமாவாசை சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதி

Byவிஷா

Nov 25, 2024

கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு, நவம்பர் 28 முதல் டிசம்பர் 1ஆம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்குச் செல்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோவிலில் ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், கார்த்திகை , பௌர்ணமி, அமாவாசை நாட்களில் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு நவம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 1ம் தேதி வரை நான்கு நாட்கள் வரை பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும். இரவில் பக்தர்கள் கோயிலில் தங்குவதற்கு அனுமதி கிடையாது என கோவில் மற்றும் வனத்துறை, மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தக் கோவிலுக்கு 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என கோவில் மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன. அதே போல் சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். மலைப்பகுதியில் அமைந்துள்ள ஓடைகளில் இறங்கி குளிக்க கூடாது. மலைமேல் இரவில் தங்குவதற்கு அனுமதி இல்லை. பாலித்தீன் கேரிப்பை, மது மற்றும் போதை வஸ்து பொருட்கள் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை மலை மேல் எடுத்து செல்ல அனுமதி இல்லை. அனுமதிக்கப்படும் நாட்களில் மழை பெய்தால் அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.
பிரதோஷம் மற்றும் பௌர்ணமி நாட்களில் மகாலிங்க சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா, செயல் அலுவலர் ராம கிருஷ்ணன் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.