நீதி அரசரை மிரட்டிய காவல் துணை கண்காணிப்பாளர் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்துள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்த சாமிதுரை என்பவர் கடந்த ஜூலை 29 ஆம் தேதி மர்ம நபர்கள் சிலரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வந்த நிலையில் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து பனங்காட்டுப் படை கட்சியின் நிறுவன தலைவர் ராக்கெட் ராஜா என்பவரை திருவனந்தபுரத்தில் வைத்து நெல்லை போலீசார் கைது செய்தனர். 6 மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பின் நான்குநேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்
பின்னர் சென்னை புழல் சிறைக்கு மாற்ற பட்டார். இந்நிலையில் ராக்கெட் ராஜா மீது குண்டர் தடுப்பு சட்டம் பிரிவு போடபட்டு சிறையில் உள்ளார். இந்த வழக்கை விசாரித்து வரும் நெல்லை மாவட்டம் வள்ளியூர் கிளை நீதி மன்றத்தில் கடந்த 28.4.23 அன்று போலீஸ் காவலுடன் அழைத்து வரப்பட்டார். ராக்கெட் ராஜா வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ஆனந்த் ராக்கெட் ராஜா குற்றவாளி என்று உறுதி செய்து செசன்ஸ் கோர்ட்க்கு மாற்ற உத்தரவு பிறப்பித்தார். எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் எப்படி குற்றவாளி என்று உறுதி செய்தீர்கள் என்று வழக்கறிஞர்கள் கேட்டதற்கு வள்ளியூர் காவல் துணை கண்காணிப்பாளர் யோகேஷ்” மிரட்டல் ‘ என்று ஒப்பனாக கூறினார் மாஜிஸ்ட்ரேட் ஆனந்த். அதுமட்டுமின்றி ஒரு நீதி அரசர் முன்பு தலையில் தொப்பி கூட இல்லாமல் வாதிட்டுள்ளார் ( துணை கண்காணிப்பாளர்) யோகேஷ். வழக்கு நடைபெற்ற தினத்தன்று உள்ள சிசிடிவி காட்சிகளை பார்த்தால் காவல் துணை கண்காணிப்பாளர் யோகேஷ் தலையில் இல்லாத தொப்பி. நீதி அரசரை மிரட்டிய காவல் துணை கண்காணிப்பாளர் யோகேஷ் அவரின் பதிவு.போன்ற ஆதாரம் அந்த நீதிமன்ற சிசிடிவி யில் உள்ளது என்றும் ராக்கெட் ராஜா ஆதரவாளர்கள் சிலர் தெரிவித்தனர்.
நிதி அரசரை மிரட்டும் அளவுக்கு காவல்துறைக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள் என்று அக்கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் நாடார் சமுதாய மக்களிடமும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.