• Thu. Jan 15th, 2026
[smartslider3 slider="9"] Read Now

தேமுதிக தனித்து போட்டி- வேட்பாளரை அறிவித்தார் பிரேமலதா

ByA.Tamilselvan

Jan 23, 2023

தேமுதிக பொருளாளர் பிரேமலதா தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இடைத்தேர்தலில் தனித்துபோட்டியிடுவதாக கூறி வேட்பாளரையும் அறிவித்தார்.
கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா ….ஈரோடு இடைத்தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட உள்ளது. ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தன் வேட்பாளராக களமிறங்குகிறார். . தற்போதைய சூழ்நிலையில் தேமுதிக எந்த கூட்டணியிலும் இல்லை. ஈரோடு கிழக்கு தொகுதி ஏற்கனவே 2021ல் எங்கள் கட்சி வென்ற தொகுதி. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவுக்கு இன்றைய கூட்டத்தில் இரங்கல் தெரிவித்துள்ளோம். ஈவிகேஎஸ் இளங்கோவன் கேப்டனின் நல்ல நண்பர். குறைந்தது 3 மாதம் கழித்து இடைத்தேர்தல் கொண்டு வந்திருக்கலாம். இப்போது தேர்தலை அறிவித்துவிட்டார்கள். அறிவித்தது அறிவித்ததுதான். எனவே, அரசியலில் இதையெல்லாம் சந்தித்துதான் ஆகவேண்டும். எனவே, தேமுதிக தனியாக களம்காண்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.