• Wed. Sep 24th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

தமிழக அரசின் மீது கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்..,

ByS. SRIDHAR

Aug 22, 2025

புதுக்கோட்டையில் தமிழக அரசின் மீது கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் வீர முத்தரையர் சங்கம் மற்றும் தேசிய பாட்டாளி கட்சியின் சார்பில் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்திற்கு வீர முத்தரையர் சங்க மற்றும் தேசிய பாட்டாளி கட்சியின் நிறுவனத் தலைவர் சி.கருப்பையா முத்தரையர் தலைமையில் முத்தரையர் சமுதாய மக்களுக்கான 10.5% கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் உள்ள இட ஒதுக்கீடு போன்ற 11 அம்ச கோரிக்கை வலியுறுத்தி அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய கருப்பையா முத்தரையர் சமுதாயத்திற்கான 10.5% கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளின் உள்ள இட ஒதுக்கீட்டை நிரந்தரமாக அமல்படுத்துதல் 29 வெவ்வேறு உட்பிரிவாகக் கொண்டுள்ள முத்தரையர் இன மக்களை ஒரே இன பிரிவில் கொண்டு வந்து முத்தரையர் என ஜாதி சான்றிதழ் வழங்க ஆணையிட வேண்டும்.

பள்ளிகளில் முத்தரையர் வரலாறு கலாச்சாரம் பாடமாக சேர்த்தல் வேண்டும். முத்தரையர் கல்வி புரைமைப்பு வாரியம் வழங்க வேண்டும். TNPSC உறுப்பினர் பதவி வழங்க வேண்டும். உயர் நீதிமன்றத்தில் முத்தரையர்களை நீதிபதியாக பதவியில் அமர்த்த வேண்டும். பல்கலைக்கழகங்களில் துணை வேந்தராக பதவி வழங்க வேண்டும் பேரரசர் பெருமூடுகுமுத்தரையர் அவர்களின் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் பேரரசர் பெருமிடு முத்தரையர் அவர்களின் பிறந்த தினமான மே 23 அரசு மாநில அளவில் முழுவதும் கொண்டாடப்பட வேண்டும்.

முத்தரையர்கள் பெரும்பான்மை உள்ள பகுதிகளில் அறங்காவலர் குழுத் தலைவர்களாக தலைவராக முத்தரையருக்குவாய்ப்புகள் வழங்க வேண்டும். புதுக்கோட்டை நகர மையப் பகுதிகளில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவருடைய திருஉருவ சிலைக்கு அரசு சொந்த செலவில் அமைத்திட வேண்டும் என்று பல அம்சம் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராம பகுதி மக்கள் ஆயிரத்துக்கு மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.