பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
டாஸ்மாக் ஊழியர்களின் நிரந்தரப்படுத்த காலமுறை ஊதியம் வழங்கப்பட வேண்டும் துறைஅமைச்சரின் அலுவலக சிபாரிசுகள் பேரில் வழங்கப் பட்டுள்ள முறைகேடான பணியிட மாறுதல் ஆணை ரத்து செ ய்து வெளிப்படையாக பொது பணியிட மாறுதலைஅமல்படுத்த வேண்டும்
கடை ஊழியர்களின் மிரட்டும் துறை அமைச்சரது ஏஜெண்டுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் நிர்வாகத்தில் ஆளுங்கட்சி மற்றும் ஆளும் தொழிற்சங்கங்கத்தின் தலையீட்டை தடுத்து நிறுத்த வேண்டும் . தொழிற்சங்க முன்னணி ஊழியர்களை பழிவாங்கும் பணியிட மாற்றங்களை திரும்ப பெறுக உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக மதுக்கூடங்களை நடத்தும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் நிர்வாக சீர்கேடுகளை களைந்திட நிர்வாக சீரமைப்பு குழு அமைத்திட வேண்டும். உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழில் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் மதுரை அண்ணாநகரில் உள்ள டாஸ்மாக் மண்டல அலுவலகம் முன்பு CITU மாநில துணை பொதுச்செயலாளர் சரவணப்பெருமாள் தலைமையில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இதில் சிறப்புரை மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் சி ஐ டி யு தெய்வ ராஜ் உட்பட்ட தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் மதுரை தேனி திண்டுக்கல் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி நாகர்கோவில் ஆகிய டாஸ்மாக் ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
மதுரையில் டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம்
