• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மஞ்சூரில் ஆர்ப்பாட்டம்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பஜார் பகுதியில் குந்தா வட்டார காங்கிரசின் சார்பில் ராகுல்காந்தி அவர்கள் மீது பொய்வழக்கிட்டு ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் பாஜக மோடி அரசினை கண்டித்து மஞ்சூரில் உதகை( குந்தா) வட்டார காங்கிரஸ் தலைவர் கீழ்குந்தா ஆனந்த் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலாளர் நாகராஜ் கண்டன உரையாற்றினார்.
கீழ்குந்தா பேரூராட்சி மன்ற துனைத்தலைவர் நேரு முன்னிலை வகித்தார். கண்டன ஆர்ப்பாடரடத்தில் பொதுச்செயலாளர் ஓணிக்கன்டி குமார்MC, மாவட்ட இளைஞர்காங்கிரஸ் பொதுச்செயலாளர் உசேன், குந்தா பஞ்சாயத்து கமிட்டி தலைவர் அட்டுமன்னு சிவக்குமார்,மாவட்டசெயலாளர் ஆர்மி ராஜ்குமார், வட்டார பொதுச்செயலாளர்ள், தீபு,சத்யசீலன், குந்தாவட்டார மகளிரணிதலைவர் கீழ்குந்தா ராணி,முன்னாள் கவுன்சிலர் சேரனூர் ராமச்சந்திரன்,மனோஜ், இரியசீகை செல்வன்,கிண்ணக்கொரை லட்சுமணன் மற்றும் ஏராளமானோர் திரளாக கலந்துகொண்டனர்

2019 ல் தலைவர் ராகுல்காந்தி கர்நாடாகா கோலாரில் மோடியை விமர்சித்ததாக குஜராத் சூரத்தில் பொய்வழக்கு தொடுக்கபட்டு 4 ஆண்டுகளுக்கு பிறகு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு தண்டனை விதித்திருப்பது ஜனநாயகத.தின் குரல்வலையை நெறிக்கும் கொடூர செயல் ஆகும். இந்தியாவில் பிறந்த்து பாவம் என்றுபாவம் என்று சொன்ன மோடி மன்னிப்பு கேட்கவேண்டும், பராளுமன்றத்தில் தலைவர் ராகுல்காந்தி அவர்களைபேச அனுமதிக்காத ஜனநாயக படுகொலையை கண்டித்தும் தொடர் பொய் வழக்கை கண்டித்து நடந்தேறிய கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது இதில் ஏராளமான காங்கிரஸ் கட்சி சேர்ந்தவர்கள் உடன் இருந்தனர்.