மத்திய அரசு துறைகளான ரயில்வே, எல்ஐசி போன்ற பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்து மதுரை ரயில்வே மேற்கு நுழைவாயில் முன்பாக டி.ஆர்.இ.யு., (சிஐடியு) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோட்டதலைவர் ஆண்டிரன் தலைமையில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதில், ‘ரயில்வே எல்ஐசி உட்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்காதே, தொழிலாளர் நலச்சட்டங்கள் கார்ப்பரேட் நிறுவனங்கள் நிபந்தனைகேற்ப மாற்றாதே, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய், மாநில முறைசாரா தொழிலாளர் நல வாரிய அமைப்புகளை முடக்காதே, ரயில்வேயில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், இரண்டரை கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என மோடி அரசு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் உட்பட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் கோட்ட இணைச் செயலாளர் சங்கரநாராயணன் கண்டன உரை ஆற்றினர். ரயில்வே தொழிற்சங்க அனைத்து ஊழியர்கள் கலந்து கொண்டனர்.