தேனி மாவட்ட ஏஐடியுசி அனைத்து துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று பகல் 1 மணிக்கு தேனி மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு துப்பரவு தொழிலாளர்கள் கோரிக்கைகளை வைத்து ஆர்ப்பாட்டம். துப்புரவு தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் k. பிச்சைமுத்து தலைமையில் நடைபெற்றது.

2020-2021 ஆம் ஆண்டுக்கான தூய்மை பணியாளர்களுக்கான குறைந்த பட்ச கூலி வழங்க மாவட்ட ஆட்சியர் ஆணை பிறப்பித்தும் இதுவரை வழங்காத நிலையில் நாள் ஒன்றுக்கு ரூ.424 வழங்காத நகராட்சிகள் போரூராட்சிகள் ஊராட்சி நிர்வாகம் மீதும் மற்றும் ஒப்பந்தாரர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட ஆட்சித்தலைவருக்கு மனு ஒன்றை துப்புரவு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மனு அளித்துள்ளார்.மேலும் தேனி அல்லிநகரம் நகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ESI-EPF-ல் தொடர்ந்து முறைகேடு நடப்பதாகவும் அதில் குறிப்பிட்டுருந்தார்.அதுமட்டுமின்றி கொரோனா கால சிறப்பு ஊதியமாக ரூ.15,000 வழங்க வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார்.

இதனை தெடர்ந்து துப்பரவு தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைப்பற்றது.இந்த ஆர்பாட்டத்தில் ஏஐ டியுசி மாவட்ட செயலாளரும் msp ராஜ்குமார் மற்றும் ஏஐடியுசி மாவட்ட பொருளாளர் சென்றாய பெருமாள் பங்கேற்று சிறப்புரை செய்தனர்.மேலும்அனைத்து துப்புரவு தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.