• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Byவிஷா

Mar 4, 2024

தமிழகத்தில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்து வரும் நிலையில், திமுக அரசைக் கண்டித்து, இன்று அதிமுக சார்பில், கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகிறது.
இதுதொடர்பாக, அதிமுக எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது..,
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும்போதைப்பொருள் புழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தத்தவறிய விடியா திமுக அரசைக் கண்டித்தும் இன்று அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அதிமுக சார்பில்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இன்றைய போராட்டத்தோடு நிச்சயமாக இது நின்று விடப்போவதில்லை. தமிழ்நாட்டில் கடைசி துளி போதைப்பொருள் ஒழியும் வரை எங்களுடைய போராட்டம் தொடரும்.
பெற்றோர்களே, இந்த விடியா ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறி வருகிறது. நம் பிள்ளைகளை நாம் தான் பார்த்துக் கொள்ள வேண்டும். கவனமாக இருங்கள்! மாணவச் செல்வங்களே, இளைய சமுதாயமே– உங்கள் எதிர்காலம் மிக முக்கியம். ஒரு சிறிய தவறு கூட பெரிய தண்டனைகளை பெற்றுத் தந்துவிடும் ” என்றுகுறிப்பிடப்பட்டுள்ளது