• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இணையத்தை தெறிக்கவிட்ட தீபிகா படுகோனே முத்தம்

Byதன பாலன்

Jan 31, 2023

இந்தி சினிமாவுக்கு வருடத்தொடக்கத்தில் புத்துணர்ச்சியும், நம்பிக்கையும் ஏற்படுத்தியுள்ளது பதான் படத்தின் விஸ்வரூப வெற்றியும் வசூல் கணக்கும் நான்கு வருடம் கழித்து நாயகனாக நடித்து வெளிவந்துள்
பதான் படத்தின் வெற்றி மூலம் இன்னும் நான் பாலிவுட் பாட்சா தான் என்பதை சாருக்கான் நிருபித்துள்ளார் அவரது மதத்தை அடையாளப்படுத்தி அவர் நாயகனாக நடிக்கும் படங்களை இந்து மத தீவிரவாதிகள் குதறி எடுத்தாலும், பாய் காட் பதான் என்றாலும் இந்தியாவில் சினிமா ரசிகனும், மக்களும் மொழி, மதம்,இனம் துறந்து படங்களை பார்ப்பதும், ஆராதிப்பதை தொடர்கின்றனர் என்பதை தென்னிந்திய மொழி படங்கள் வட இந்தியாவில் வெற்றிபெறுவதும் தென்னிந்தியாவில் இந்தி படங்கள் வெற்றிபெற்று உறுதிப்படுத்துகிறது பத்திரிகையாளர்களை சந்திப்பதை தெய்வகுத்தமாக கருதும் தமிழ் சினிமா முன்னணி நடிகர்கள் இருக்கும் திரையுலகில் பதான் படத்தின் வெற்றியை மகிழ்ச்சியுடன் அறிவிக்க இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகன் சாருக்கான், நாயகி தீபிகா படுகோன் மற்றும் படக்குழுவினர் மும்பையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் நாயகி தீபிகா படுகோனே அந்தப் படத்தின் நாயகன் நடிகர் ஷாருக்கானுக்கு கட்டி பிடித்து முத்தம் கொடுத்தது இணையத்தில் வைரலாகி வருகிறது.


ஷாருக்கான் நடிப்பில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வெளியான படம் பதான். ஸ்பை ஆக்க்ஷன் த்ரில்லர் பாணியில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் ஷாருக்கானுடன், தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரஹாம், கேமியோ ரோலில் சல்மான்கான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.குடியரசு தினத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி 25-ந் தேதி வெளியான பதான் படம் 5 நாள் முடிவில் இதுவரை உலகம் முழுவதும் 560 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதுஷாருக்கானுக்கு இந்த வெற்றி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல படங்களின் சாதனையை பதான் முறியடித்துள்ளது.இந்நிலையில், பதான் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு மும்பையில் நடைபெற்றது. இதில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆப்ரஹாம், ஆகியோருடன் படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் பங்கேற்றார். இதில் படத்தின் வெற்றி குறித்து உணர்ச்சி பொங்க பேசிய நாயகி தீபிகா படுகோனே, உண்மையாக கூற வேண்டுமென்றால், சாதனைகளை முறியடிக்க போகிறோம் என்று நான் நினைக்கவில்லை இந்த வெற்றி திருவிழா போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது ரசிகர்கள் அனைவரின் அன்பை பார்க்கும்போது படம் அதற்கு தகுதியானதே என தோன்றுகிறது நிகழ்ச்சி தொடங்குவதற்கு
முன்னதாக ஷாருக் கான், ஜான் ஆபிரஹாம், தீபிகா படுகோனே மூவரும் பத்திரிக்கையாளர்களுக்கு போஸ் கொடுத்தனர். அப்போது ஷாருக்கானுடன் போஸ் கொடுத்த தீபிகா அவரை கட்டிபிடித்து முத்தம் கொடுத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.