


மழை இல்லாததால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து “0” ஆனது. கடந்த ஆண்டைகாட்டிலும் 10 அடி தண்ணீர் குறைவாகக் காணப்படுகிறது.
முல்லைப்பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்ததால் கடந்த சில நாட்களாக அணைக்கு வினாடிக்கு 100 கனஅடிவரை வந்துகொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை முற்றிலும் குறைந்து “0” ஆனது.
இன்று காலை நிலவரப்படி 152 அடி உயரமுள்ள பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.90 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லை. அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு வினாடிக்கு 400 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 2069 மில்லியன் கன அடியாக உள்ளது.
மாவட்டத்தில் மற்ற அணைகளின் நிலவரம்
71 அடி உயரமுள்ள வைகையின் நீர்மட்டம் 63.09 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 239 கனஅடியாகவும், அணையிலிருந்து வினாடிக்கு 669 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 4221 மில்லியன் கன அடியாக உள்ளது.
126.28 அடி உயரமுள்ள சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 84.95 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து இல்லை. அணையிலிருந்து வினாடிக்கு 25 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையின் இருப்பு நீர் 43.91 மில்லியன் கனஅடியாக உள்ளது.
57 அடி உயரமுள்ள மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 39.05 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 17 கனஅடியாகவும், அணையிலிருந்து வினாடிக்கு 75 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணையின் இருப்புநீர் 143.38 மில்லியன் கனஅடியாக உள்ளது.
52.55 அடி உயரமுள்ள சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 27.60 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லை. அணையிலிருந்து வினாடிக்கு 14 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டள்ளது. அணையின் இருப்புநீர் 19.13 மில்லியன் கனஅடியாக உள்ளது. மாவட்டத்தில் மழை எங்கும் பதிவாகவில்லை.
கடந்த ஆண்டு இதேநாளில், பெரியாறு அணையின் நீர்மட்டம் 126.90 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 133 கனஅடியாகவும் இருந்தது. அணையிலிருந்து தமிழகப்பகுதிக்கு வினாடிக்கு 1508 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


