• Sun. May 3rd, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

இலங்கை பிரதமராக தினேஷ் குணவர்த்தன பதவியேற்பு

ByA.Tamilselvan

Jul 22, 2022

இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ்குணவர்த்தன தேர்வு செய்யப்பட்டதை அடுத்து இன்றுகாலை பதவியேற்றுக்கொண்டார்.
இலங்கையில் நிலவிவரும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்தது . அதிபர் கோத்த பய ராஜபக்சே தனது பதவியையும் ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் புதிய பிரதமராக யாரை நியமிக்கலாம் என அவர் ஆலோசனை நடத்தினார் . இதில் ராஜபக்சே கட்சியை சேர்ந்த தினேஷ் குணவர்த்தனவை நியமிப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டது. பின்னர் அவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்ட்டார். இதையடுத்து இலங்கையின் 15-வது புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தன இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டார்.