

மாமல்லபுரத்தில் நடைபெறும் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவில் கலந்து கொள்வதற்காக பிரசாந்த் கிஷோர் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.
மாமல்லபுரத்தில் நாளை தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெறவுள்ளது. இதற்காக பனையூரில் உள்ள கட்சி தலைமையகத்திற்கு மாவட்ட செயலாளர்களை அழைத்து, கட்சி சார்பில் அனுமதி சீட்டுகள் நேற்று வழங்கப்பட்டன.
இந்த விழாவில் 2,000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட உள்ளனர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிரஷாந்த் கிஷோர் பங்கேற்பார் என கூறப்பட்ட நிலையில், இன்று விமானம் மூலம் பாட்னாவில் இருந்து பிரசாந்த் கிஷோர் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்
இங்கிருந்து காரில் சாலை மார்க்கமாக மாமல்லபுரம் செல்லும் பிரசாந்த் கிஷோர் அங்கு தனியார் எஸ்ஆர்டி நடைபெறும் தமிழ்நாடு வெற்றி கழகத்தின் இரண்டாவது ஆண்டு தூக்கம் விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.

