• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

‘தவெக’ கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு…

BySeenu

Jan 31, 2025

வெள்ளலூர் குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என தவெக’ கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

சென்னை தவெக தலைமை அலுவலகத்தில் நேற்றைய தினம் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் மக்களுக்காக தவெக கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் மக்களுக்காக நீங்கள் செயல்பட வேண்டும் என கட்சி நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் இன்று, கோவை மக்களின் நீண்ட கால பிரச்சனையாக உள்ள கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தவெக கட்சியின் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் விக்னேஷ் தலைமையில் அக்கட்சியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில், மக்களின் வாழ்வாதாரத்திற்கும், சுகாதாரத்திற்கும் கேடு விளைவிக்கும் வகையில் மோசமான சுற்றுச்சூழலுடன் அமைந்திருக்கும் குப்பைக் கிடங்கினால் மாசு ஏற்பட்டு நோய்களுக்கு மக்கள் உள்ளாகிறார்கள்.

தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டால் அப்பகுதியில் பிறக்கும் குழந்தைகளுக்குக் கூட மிகவும் மோசமான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. இதைப்பற்றி மக்கள் தொடர்ந்து பல போராட்டங்களை முன்வைத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் அரசாங்கம் எடுக்கவில்லை.

அடுத்து வரவிருக்கும் தலைமுறைகளைக் கருத்தில் கொண்டு இன்று இருக்கும் தலைமுறையினர் மாசற்ற, நோயற்ற சமுதாயமாக மாற்ற வேண்டும் என்ற நிலைப்பாடுகளுடன் அப்பகுதியில் உள்ள மக்களின் நலனை கருத்தில் கொண்டும், அவர்களின் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு அளிக்க வேண்டும். உடனடியாக கிணத்துக்கடவு தொகுதியில் உள்ள வெள்ளலூர் குப்பைக் கிடங்கை மாற்றி,மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அமைத்திட வேண்டும்.

கால தாமதமின்றி தயவு செய்து இந்த மனுவை ஏற்று உடனடியாக இதற்கு தீர்வு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.